Tuesday 14 March 2017

Tamil Christian

திருவிதாங்கோடு அரைப்பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம். இது இயேசுவின் சீடரான புனித தோமா என்பவரால் கிபி முதல் நூற்றாண்டில் உதயஞ்சேரலாதன் மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் கிறித்தவம் என்பது கிறித்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்து அது தமிழகத்தில் காலூன்றி வளர்ந்த வரலாற்றையும், இன்று அதன் நிலையையும் குறிக்கிறது.

தமிழகத்தில் கிறித்தவ சமயத்தின் தொடக்கம்தொகு

கிறித்தவம் தமிழ் மண்ணில் வேரூன்றக் காரணமாக அமைந்தவர் இயேசு கிறித்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமா என்று பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.[1]அவர்கள் ஆதாரமாகக் காட்டுவன இவை: இன்றைய கேரள மாநிலத்தில் வந்திறங்கிய புனித தோமா, கிபி 52-72 ஆண்டுகளில் கிறித்தவ சமயத்தை அறிவித்து, மயிலாப்பூரில் உயிர்நீத்தார் என்னும் வாய்மொழி மரபு கேரள கிறித்தவர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது[2]; கிபி முதல் நூற்றாண்டுகளிலிருந்தே கிறித்தவ எழுத்தாளர்கள் புனித தோமா இந்தியாவுக்குக் கிறித்தவத்தைக் கொணர்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளனர்[3].சென்னை சாந்தோம் தேவாலயம் புனித தோமாவின் கல்லறை இருந்ததாகக் கருதப்படும் இடத்தின்மேல் கட்டப்பட்டது.
கிபி 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கோ போலோ போன்ற கிறித்தவப் பயணியர் மயிலாப்பூரில் புனித தோமாவின் கல்லறையைச் சந்தித்த குறிப்புகளை விட்டுச்சென்றுள்ளனர்[4].