Tuesday 14 March 2017

Tamil Christian

திருவிதாங்கோடு அரைப்பள்ளி, கன்னியாகுமரி மாவட்டம். இது இயேசுவின் சீடரான புனித தோமா என்பவரால் கிபி முதல் நூற்றாண்டில் உதயஞ்சேரலாதன் மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
தமிழ்நாட்டில் கிறித்தவம் என்பது கிறித்தவ சமயம் தொடங்கிய காலத்திலிருந்து அது தமிழகத்தில் காலூன்றி வளர்ந்த வரலாற்றையும், இன்று அதன் நிலையையும் குறிக்கிறது.

தமிழகத்தில் கிறித்தவ சமயத்தின் தொடக்கம்தொகு

கிறித்தவம் தமிழ் மண்ணில் வேரூன்றக் காரணமாக அமைந்தவர் இயேசு கிறித்துவின் சீடர்களுள் ஒருவரான புனித தோமா என்று பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.[1]அவர்கள் ஆதாரமாகக் காட்டுவன இவை: இன்றைய கேரள மாநிலத்தில் வந்திறங்கிய புனித தோமா, கிபி 52-72 ஆண்டுகளில் கிறித்தவ சமயத்தை அறிவித்து, மயிலாப்பூரில் உயிர்நீத்தார் என்னும் வாய்மொழி மரபு கேரள கிறித்தவர்களிடையே ஆழமாக வேரூன்றியுள்ளது[2]; கிபி முதல் நூற்றாண்டுகளிலிருந்தே கிறித்தவ எழுத்தாளர்கள் புனித தோமா இந்தியாவுக்குக் கிறித்தவத்தைக் கொணர்ந்தார் எனக் குறிப்பிட்டுள்ளனர்[3].சென்னை சாந்தோம் தேவாலயம் புனித தோமாவின் கல்லறை இருந்ததாகக் கருதப்படும் இடத்தின்மேல் கட்டப்பட்டது.
கிபி 13ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த மார்க்கோ போலோ போன்ற கிறித்தவப் பயணியர் மயிலாப்பூரில் புனித தோமாவின் கல்லறையைச் சந்தித்த குறிப்புகளை விட்டுச்சென்றுள்ளனர்[4].

Sunday 24 July 2016

Friday 30 October 2015

Sankarankovil Rehoboth church

2006 we are start our in church in one small room 10×10 but Jesus give new church in 2013 60×20 size of biggest church.... Please pray for our church for build more church in sankarankovil taluk...

Friday 8 November 2013

வேதத்தை உபதேசிக்கின்ற ஒரு நல்ல சபையை கண்டுபிடி சபையை ஒரு கட்டிடமாக நினைக்க வேண்டாம். விசுவாசி தான் சபை இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளுதல் (அ) அவசியமானதும் திருச்சபை அடிப்படை குறிக்கோளின் ஒன்றுமாக இருக்கிறது உங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவின் மேல் வைத்து உங்கள் பகுதியில் வேதத்தை விசுவாசித்து அதன் சத்தியத்தை போதிக்கின்ற சபையை கண்டுப்பிடித்து அதின் போதகரோடு பேசுங்கள். நீங்கள் கிறிஸ்துவில் வைத்து இருக்கிற புதிய விசுவாசத்தை போதகரும் அறிந்து கொள்ளட்டும். திருச்சபையின் இரண்டாம் குறிக்கோள் வேதத்தை உபதேசிப்பதே. தேவனின் கட்டளைகளை உங்கள் வாழ்க்கையில் எப்படி அப்பியாசப்படுத்துகிறது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள இது வழிவகுக்கிறது வேதத்தை புரிந்துகொண்டு வாழ்ந்தால் நீங்கள் வெற்றியுள்ள. வல்லமையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழலாம். II திமோ. 3:16-17 சொல்கிறது "வேதவாக்கியங்கலெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது அவைகள். உபதேசத்திற்க்கும். சீர்திருத்தத்திற்கும். நீதியை படிப்பித்தலுக்கு பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது." திருச்சபையின் மூன்றாம் குறிக்கோள் ஆராதிப்பது. ஆராதிப்பது என்பது தேவன் நமக்கு செய்த எல்லா காரியங்களுக்கும் நன்றி செலுத்துவதாகும் தேவன் நம்மை இரட்சித்தார். நம்மை நேசிக்கிறார். நம் தேவைகளை சந்திக்கிறார். நமக்கு வழிகாட்டி நடத்துகிறார் நாம் அவருக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது எப்படி? தேவன் பரிசுத்தர். நீதியுள்ளவர், அன்பானவர், இரக்கம் உள்ளவர். கிருபை நிறைந்தவர், வெளிப்படுத்தல் 4:11 "கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுகொள்கிறதற்குப் பாத்திராராயிருக்கிறீர் என்று அறிவிக்கிறது.


REHOBOTH CHURCH SNKL: REHOBOTH CHURCH DETAILS

REHOBOTH CHURCH SNKL: REHOBOTH CHURCH DETAILS

Monday 24 June 2013

வேத ஆராச்சி.......

இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தது உண்மையா?
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லையென்றும் வேதாகமத்தில் புதிய ஏற்பாடு பகுதி அவரது சீடர்களால் எழுதப்பட்டதனால், அதை அவர்கள் மறைத்திருக்க கூடும்மென்றும் சிலர் ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவர்.
அவர்களின் குற்றச்சாட்டின்படி தனியே சீடர்களால் மட்டுமின்றி இயேசு கிறிஸ்துவின் காலத்தில் வாழ்ந்த பல சரித்திர ஆசிரியர்களும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருக்கின்றபடியாலும்; இக் குற்றச்சாட்டுக்கள் பொய் என்று தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
இயேசு சிலுவையில் மரித்ததற்கான வரலாற்று ஆதாரங்கள்;
FLAVIUS JOSEPHUS
(உலகப்புகழ் பெற்று யூத சரித்திர ஆசிரியர்) கிறிஸ்துவின் மரணத்திற்கு சில ஆண்டுகளுக்குப்பின்பு கி.பி 66 ஆம் ஆண்டளவில் கலிலேயாவிலுள்ள யூத இராணுவஅதிகாரியாக இருந்தவர். அவர் தன்னுடைய புஸ்தகம் Antiquitnes இல் கிறிஸ்துவைப்பற்றியும் அவர் சிலுவையில் அறையப்பட்டதைக்குறித்தும் இப்படி குறிப்பிட்டுள்ளார்.
இப்பொழுது இயேசுவின் காலம் வந்துவிட்டது, ஒரு ஞானி, சட்டத்தின்படி கூறுவதென்றால் ஒரு மனிதர், அநேக அற்புதங்களை செய்தவர். அவர் அநேகருக்கு போதித்தார், அவருடைய சத்தியமான போதனைகளை சந்தோஷத்துடனும் ஏற்றுக்கொண்டார்கள். பொந்தியு பிலாத்துவினால் சிலுவையில் அறையப்பட்டார். ஆனாலும் இயேசுவை உண்மையாக நேசித்தவர்கள், அவர்களுடைய நம்பிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை. மூன்றாம் நாளில் அவர் தம்முடைய சீடர்களுக்கு உயிருடன் காட்சியளித்தார். அவருக்கு முன்பு வந்த பல தீர்க்கதரிசிகள் அவரைக்குறித்து பல அற்புதமான தீர்க்கதரிசனங்கள் சொன்னது அவ்வளவும் அவருக்கு பொருத்தமாக இருந்ததது.
http://www.ccel.org/j/josephus/JOSEPHUS.HTM(அவர் எழுதிய புஸ்தகம்)

JUSTIN MARTYR (Philosopher, Apologist) - Apologetics: "the defense of a position against an attack", not from the English word apology
கி.பி 150 ஆண்டளவில் சீசார் அந்தோனியுஸ் பியுஸ்-க்கு"கிறிஸ்தவர்கள் தற்காப்பு" எனும் அவர் எழுதிய புஸ்தகத்தில் இயேசுகிறிஸ்துவின் மரணத்தைப்பற்றியும், அவர் மரணத்திற்கு பொந்தியு பிலாத்து காரணமாக இருந்தததைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.
http://www.catholic-forum.com/saints/stj29002.htm

CORNELIUS TACITUS (born A.D 52-54)
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர், கி.பி112 ஆசியாவின்(துருக்கி) கவர்னராக இருந்தவர். இவருடைய உறவினன் யூலியுஸ் அக்ரிகோலா என்பவர் கி.பி 82-84 பிரித்தானிய கவர்னாராக இருந்தவர்; கொர்நேலியுஸ் ரசித்துஸ் நேரோ மன்னனுடைய ஆட்சியைப்பற்றி குறிப்பிடுகையில் இயேசுகிறிஸ்துவை ப்பற்றியும், ரோமாபுரியிலே கிறிஸ்தவத்தின் ஆரம்பத்தையும் பற்றி தன் னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் எழுதிய நூலில் (XV) ஆம் பாகத்தில்:
இயேசு கிறிஸ்து என்பவர் திபேரியு மன்னன் ஆட்சியில், பொந்தியு பிலாத்து யூதாவின் அதிகாரியாக இருக்கையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை யைப்பற்றி எழுதியிருக்கின்றார்.
http://classics.mit.edu/Tacitus/annals.html (அவர் எழுதிய புஸ்தகம்)

LUCIAN OF SAMOSATA கி.பி 120-180
இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் தம்முடைய புஸ்தகத்தில் பலஸ்தீனாவிலே பிறந்த இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், அவருடைய மரணத்தைப்பற்றியும் எழுதியுள்ளார்.
http://www.paulmusgrave.com/blog/archives/000066.html

MARA BAR-SERAPION
இவர் சீரியா நாட்டை சார்ந்தவர், இவருடைய காலம் கி.பி 70 இவர் ஜெயிலில்இருந்து தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் யூதர்கள் தங்களுடைய ஞானமுள்ள இராயாவை கொலை செய்தனர் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
http://www.neverthirsty.org/pp/hist/marbar.html

PLINY THE YOUNGER
அவர்கள் செய்த தவறுகள், அல்லது அவர்களுடைய பைத்தியக்கார தன்மைகள் என்னவெனில், குறிப்பிட்ட சில நாட்களில் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன எழுந்திருந்து இயேசுகிறிஸ்துவை ஒரு கடவுளைப்போல கும்பி டுகின்றனர். அவர்களிடத்தில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. களவு, கொள்ளை, விவாக இரத்து, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை மீறுவது போன்ற காரியங்கள் அவர்களிடத்தில் இல்லை.
http://www.earlychristianwritings.com/text/pliny.html

SUETONIUS
இவர் ஒரு ரோம எழுத்தாளர், இவர் எழுதிய"க்ளோடியஸ் வாழ்க்கை வரலாறு" பகுதியில் கிறிஸ்தவர்களை ரோமை விட்டுக்ளோடியஸ் போகச்சொல்லி துரத்தியதைப்பற்றி குறிப்பபிட்டிருக்கின்றார். இவருடைய வாழ்க்கை காலம் கி.பி 69-122.
http://www.fordham.edu/halsall/ancient/suetonius-julius.html

TERTULLIAN
கி.பி 155-220 வாழ்ந்த இவர் இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் அவரது வாழ்க்கையைப்பற்றியும், மரணத்தைப்பற்றியும் எழுதியிருக்கின்றார்.
http://www.earlychristianwritings.com/tertullian.html

PHLEGON
கி.பி 140, முதலாம் நூற்றாண்டை சேர்ந்த எழுத்தாளர், இவருடைய புஸ்தகங்கள் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் வேறு புரதான சரித்திர ஆய்வாளர்கள் இவருடைய எழுத்துக்களைப்பற்றி கூறும் சமயத்தில், இவர் இயேசுவின் சிலுவை மரணத்தைப்பற்றி குறிப்பிட்டிருந்தார் என்று கூறுகின்றார்கள்.
THULUS
இவரும் முதலாம் நூற்றாண்டை சார்ந்த எழுத்தாளன், காலம்: கி.பி 52. இவருடைய புஸ்தகங்களும் இப்போது இல்லை. தொலைந்து விட்டன. ஆனால் இவருடைய புஸ்தகங்களைப்பற்றி வேறு புராதான சரித்திர ஆய்வாளர்கள் கூறுகையில்: இவரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைப்பற்றி தன்னுடைய புஸ்தகத்தில் குறிப்பிட்டிருந்தார் என்று. The Chronology of Julius Africanus எனும் கி.பி 221 எழுதப்பட்ட புஸ்தகத்தில் காணலாம்.
இதிலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற அநேகர், மாபெரும் மேதைகள், படித்தவர்கள், தங்களுடைய கால கட்டங்களிலுள்ள சரித்திரத்தை எழுதி யவர்கள். இயேசு கிறிஸ்துவினுடைய காலத்திலிருந்து கி.பி 250 வரை யிலான சரித்திரங்களின் ஆசிரியர்கள்.
முதலாம் வார்த்தை
லூக்கா:23:34.
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.

இரண்டாம் வார்த்தை
லூக்கா:23:43.
இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மூன்றாம் வார்த்தை
யோவான்:19:26,27
அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.

நான்காம் வார்த்தை
மத்தேயு:27:46, மாற்கு:15:34
ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

ஐந்தாம் வார்த்தை
யோவான்:19:28.
அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

ஆறாம் வார்த்தை
யோவான்:19:30.
இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

ஏழாம் வார்த்தை
லூக்கா:23:46
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.

இயேசு கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தாரா? இல்லையென்றால் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தாரா?

'இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. ஆழ்ந்த மயக்க நிலையிலிருந்து அவர் மீண்டதையே அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் எனக் கூறுகின்றனர்“ என இரு பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவித்ததாக இலங்கை வானொலியி்ல் 27.04.1991 சனிக்கிழமை ஒலிபரப்பட்ட செய்தியிலும் அதனைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய செய்திப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட செய்தியிலும் குறிப்பிடப்பட்டது அநேக கிறிஸ்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய வேளையில், கிறிஸ்தவத்தை எதிர்ப்பவர்களுக்கு ஆனந்தத்தை அளிப்பதாய் இருந்தது. எனினும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. அவர் மயக்க நிலையிலேயே இருந்தார் எனும் இக்கருத்து இன்று உருவான ஒரு புதிய கருத்து அல்ல. கிறிஸ்தவ மார்க்கத்தின் மையமாக இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதல் அமைந்திருப்பதனால், கிறிஸ்தவத்தை அழிக்க முயற்சித்த அனைவருமே இயேசு கிறிஸ்து உயிர்தெழுதலை மறுதலிக்க பலவிதமான கருத்துக்களை காலத்திற்குக் காலம் கூறிவந்துள்ளனர். எனவே, நம்நாட்டின் செய்தியளிப்பு ஊடகங்கள் மூலமாக கொடுக்கப்பட்ட இச்செய்தி, ஒரு புதிய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பு அல்ல. மாறாக ஒரு பழைய கண்டத்தின் ஒரு புது அறிவிப்பேயாகும்.
“இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணத்தால் கிறிஸ்து சிலுவையில் உணர்விழந்தார். அவரது தோல் கருமை படிந்திருந்ததையும் அவர் அசைவற்று இருந்ததையும் வைத்து அவர் இறந்துவிட்டாரென்று தவறாக கணிக்கப்பட்டது. இதனால் அவரைச் சுற்றி நின்றவர்கள் அவர் இறந்து விட்டாரென்று நம்பியதில் எதுவித சந்தேகங்களுமில்லை“ என்று லோயா டேவிஸ் என்பவரும் மார்கிரட் என்ற சித்தாந்தவாதியான அவரது மனைவியும் தெரிவித்துள்ளதாக 28.04.91 இல் இதுபற்றி பிரசுரிக்கப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. உண்மையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததற்கான போதுமான சான்றுகள் இருக்கும்போது, அவர் இரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாக சிலுவையில் உணர்விழந்தார் எனக் கூறுவது அறிவீனமானதும் ஆதாரச்சான்றுகளைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனநிலையையுமே காட்டுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. எனவே இயேசு கிறிஸ்து, மயக்கத்திலிருந்து உணர்வடையவில்லை. மாறாக மரணத்திலிருந்தே உயிர்த்தெழுந்தார் என்பதற்கான ஆதாரச் சான்றுகளை ஆராய்ந்தறிவோம்.
(1) இயேசு கிறிஸ்து சிலுவையிலறையப்பட்டார்
இயேசு கிறிஸ்துவின் மரணம் இயற்கையான முறையில் ஏற்பட்டதொன்றல்ல. அவர் சிலுவை மரத்தில் அறையப்பட்டு மரணமடைந்தார் சிலுவை மரத்தில் ஒருவனை அறைந்து கொலை செய்வது, அக்காலத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட முறையாகும். “ஆரம்பகாலத்தில் காட்டுமிராண்டி களினால் அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறையி யானது பின்பு, பெர்சியர்களினாலும் அதன் பின்ப கிரேக்கர்களாலும் ரோமர்களினாலும் பின்பற்றப்பட்டது. (The Cross of Christ by John Stott) இது மிகவும் கொடூரமான மரணதண்டனை முறையாகும். சிலுவை உருவில் (+ எனும் உருவில்) அமைக்கப்பட்ட மரத்தில் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்டு ஆணிகள் அடிக்கப்பட்ட நிலையில் ஒருவனை தொங்கவைப்பது மூர்க்கமான, ஈவிரக்கமற்ற மரணதண்டனை முறை என்பதை மறுப்பதற்கில்லை. “கி.பி. 315 இல் ரோம சக்கரவர்த்தியான கொன்ஸ்டன்டைன் மரணதண்டனை முறையை மாற்றியமைக்கும் வரை இம்முறையே பின்பற்றப்பட்டு வந்தது. “ (Crucifixion by D.H.Wheaton in New Bible Dictionary) இயேசு கிறிஸ்துவும் ஒரு குற்றவாளியைப் போல் சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்தார். (மத். 27:35-56, மாற் 15:24-41, லூக் 23:33-49, யோவான் 19:18-30)
ரோமர்கள் குற்றவாளியை சிலுவையில் அறைந்து மரணதண்டனையை நிறைவேற்றும்முறை இயேசு சிலுவையில் மயக்க நிலையில் இருக்கவில்லை. மாறாக, மரித்து விட்டதை உறுதிப்படுத்துகிறது. அக்காலத்தில் ஒருவனுக்கு மரணதண்டனை எனும் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் அவனை ஒரு தூணில் கட்டிவைத்து, ஆடைகளை அகற்றி, தோல் கிழிந்து இரத்தம் பெருக்கெடுத்து வழிந்தோடும்வரை அவனை சாட்டையால் அடிப்பது வழமை. இவ்வாறு குற்றவாளியை அடிப்பதற்கு ரோமர்கள் உபயோகித்த சாட்டையானது கூரிய பற்களைக் கொண்ட எலும்புத் துண்டுகளும், ஈயத் துண்டுகளும் பொருத்தப்பட்ட, தோலினால் செய்யப்பட்ட பல வார்களைக் கொண்ட சாட்டையாகும். இத்தகைய சாட்டையால் ஒருவனை அடிக்கும்போது அவனது தோல் கிழிந்து, நாடி நாளங்கள் உடைபட்டு, இரத்தம் வழிந்தோடும். “குற்றவாளி மரிக்கும்நிலையை அடையும் வரை அவனை சாட்டையால் அடிப்பது உரோமர்களது வழக்கமாகும். (Crucifixion of Jesus by C. T.Davis) இதை மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியரான இயூசிபியசும் உறுதிப்படுத்தியுள்ளார். (Trials and crucifixion of Christ by Eusebius) இயேசு கிறிஸ்து இவ்வாறு அடிக்கப்பட்டார் என வேதம் கூறுகிறது. (யோவான் 19:1, மாற்கு 15:15, மத்தேயு 27:26)உண்மையில் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன் இவ்வாறு அடிக்கப்பட்டது அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பே மரிக்கக்கூடிய நிலையை அடைந்து விட்டதை காட்டுகிறது.
அக்காலத்தில் மரணதண்டனை என குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட இடத்திலிருந்து தண்டனை நிறைவேற்றப்டும் இடம்வரை குற்றவாளியே தன்னுடைய சிலுவையை எடு்த்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதனால் இயேசுவை அடித்த போர்வீரர்கள் அவரை நிந்தித்து, சிலுவை அவர் மீது வைத்து, அதை சுமந்துவரும்படி அவரைப் பணித்தனர். ஆனாலும் இயேசு கிறிஸ்து நன்றாக அடிக்கப்பட்டு மரிக்கக்கூடிய நிலையை அடைந்திருந்தமையால், அவரால் அதை சுமக்க முடியாமல் இருந்தது. “குற்றவாளி தன்னுடைய சிலுவையை சுமக்க முடியாது பலவீனமாக இருந்ததால், ரோமப் போர்வீரர்கள் தம் கண்ணில் தென்படும் ஒரு உள்ளூர்வாசியை சிலுவையை சுமந்து வரும்படி பலவந்தப்படுத்துவர் (The Daily Study Bible : Matthew by William Barclay) இதனால் அவ்வழியே வந்த சீமோன் எனும் மனிதனை இயேசுவின் சிலுவையை சுமந்து வரும்படி செய்தனர். (மத். 27:32, மாற்கு 15:21) உண்மையில். இயேசுவால் தன்னுடைய சிலுவையைக் கூட சுமக்க முடியாமல் இருந்தமைக்குக் காரணம், அவர் மரிக்கக்கூடிய வண்ணம் பலவீனமான நிலையிலேயே இருந்தமையே என்பதை மறுப்பதிற்கில்லை.
சிலுவையில் அறையப்படும் இடத்திற்கு குற்றவாளி வந்து சேர்ந்ததும் அவனது கைகளும் கால்களும் சிலுவை மரத்தில் பிணைக்கப்பட்டு, ஆணிகள் அடிக்கப்பட்டு, தொங்கவிடப்படுவான். இயேசுவை “கொல்கொதா“ என்னுமிடத்தில் இவ்விதமாக ரோமப் போர்வீரர்கள் சிலுவையில் அறைந்தனர். (மாற். 15:22-24, மத். 27:32-35) அவர் ஆறு மணித்தியாலங்கள் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபின் மரணமடைந்தார். (மாற். 15:24-26 உடன் மத். 27:46-50 ஒப்பிடவும்) இயேசு கிறிஸ்து சாட்டைமயினால் நன்றாக அடிக்கப்ப்டு மரிக்கக்கூடிய நிலையில் இருந்தமையினாலேயே சிலுவையில் அறையப்பட்டு ஆறு மணித்தியாலங்களில் மரணமடைந்தார். (மத். 27:50, மாற்கு 15:37, லூக். 23:46) அவர் மயக்க நிலையில் இருக்கவில்லை.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்தமையினாலேயே அவருடைய காலெழும்புகள் முறிக்கப்படவில்லை. (யோவான். 19:32-33) ரோமர்கள் யாரையாவது சிலுவையில் அறைந்தால், அவனை அப்படியே சிலுவையில் இருந்து மரிப்பதற்கு விட்டுவிடுவார்கள். சில சமயங்களில் குற்றவாளிகள் நாட்கணக்கில் சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஆனால் யூதர்கள் தண்டிக்கப்பட்ட நாளிலேயே அடக்கம் ப்ண்ணவேண்டும் எனும் தேவகட்டளையின்படி வாழ்ந்தனர். (உபா. 2:22-23) மேலும் ஓய்வு நாளானது சரீரங்கள் மரத்தில் தொங்கவிடக்கூடாது என்பதனால் அவர்கள் சிலுவையில் அறையப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்காக அவர்களது காலெலும்புகளை முறிக்கும்படிக்கும் சரீரங்களை எடுத்துக் கொண்டு போவதற்கும் பிலாத்துவிடம் அனுமதி கேட்டனர். (யோவான் 19:31) 'சிலுவையில் தொங்கிக் கொண்டிருப்பவனை உடனடியாக மரிக்க வைக்க வேண்டுமானால் அவனது காலெழும்புகள் முறிக்கப்படும். (The Resurrection factor by Josh McDowell) பிலாத்து சரீரங்களை எடுத்துச் செல்ல அனுமதி கொடுத்தமையால் போர்வீரர்கள் இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்டவ்களின் காலெழும்புகளை முறித்தனர். ஆனால் இயேசுவின் காலெழும்புகளை முறிக்கவேண்டியதாயிருக்கவில்லை. ஏனென்றால் அவர் ஏற்கனவே மரித்திருந்தார். (யோவான் 19:32-33) இயேசு கிறிஸ்து சிலுவையில் மயங்கிய நிலையில் இருந்திருந்தால் அவரைது காலெழும்புகள் முறிக்கப்பட்டிருக்கும். அவர் மரித்திருந்தமையினாலேயே அவரது காலெழும்புகள் முறிக்கப்படவில்லை. மேலும் பிலாத்து, இயேசு கிறிஸ்து மரித்ததை உறுதிப்படுத்தியபின்பே சரீரத்தை யூதர்களிடம் கொடுத்தான். (மாற். 15:43-45) அத்தோடு அவரை சிலுவையில் அறைந்த ரோமப் போர்வீரர்கள் மய்ககத்திற்கும் மரணத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறியாதவ்கள் அல்லர். அவர் மரித்திருந்தமையினாலேயே அவரது சரீரத்தை யூதர்களிடம் கொடுத்தனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார் என்பதற்கு இன்னுமொரு ஆதாரம் ஈட்டியினால் குத்தப்பட்ட அவரது விலாவில் இருந்து புறப்பட்டு வந்த இரத்தமும் தண்ணீருமாகும். (யோவான். 19:34) “இச்சமயம் இயேசு சிலுவையில் மரிக்காமல் இருந்திருந்தால் அவருடைய விலாவில் போர்ச்சேவகன் ஈட்டியால் குத்தியபோது இரத்தம் மட்டுமே வந்திருக்கும். ஆனால் அவருடைய சரீரத்திலிருந்து தண்ணீரும் வந்தது. அவர் மரித்திருந்ததையே காட்டுகிறது. (The Day Death Died by Michael Green) “இதய வெடிப்பால் மரித்த சடங்லங்களைப் பரிசோதித்த வைத்தியர்கள் அச்சடலங்களில் இதயத்தைச் சூழவுள்ள பகுதியில் உறைந்த நிலையில் இரத்தமும் தண்ணீர் போன்ற திரவமும் இருப்பதற்கு அத்தாட்சிகளாய் உள்ளனர். (Did Jesus Die of a Broken Heart by Stuart Bersma) “மரிக்க்கூடிய நிலையில் மிகவும் பலவீனத்தோடு இரு கரங்களும் இருபாகத்திலும் நீட்டப்பட்டு, சிலுவை கிடைக்கம்பத்தின் இரு ப்ககத்திலும் பிணைக்கப்பட்ட நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தமையால் அவரது இருதயம் வெடித்து அவர் மரித்துள்ளார். (The Daily Study Bible : John by. W. Barclay) அவருடைய விலாவில் இருந்து இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டு வந்ததாக வேதம் கூறுகிறது. (யோவான் 19:34) எனவே இயேசு கிறிஸ்து உண்மையிலேயே சிலுவையில் மரித்திருந்தார் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.
(2) இயேசு கிறிஸ்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டார்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை. அவர் மய்ககநிலையிலேயே இருந்தார் எனும் பத்திரிகை செய்தியில “இயேசு சிலுவையிலிருந்து இறக்கப்பட்டு நிலத்தில் வைக்கப்பட்டதும் இரத்த ஓட்டம் மீண்டும் ஏற்பட்டது. இயேசுவுக்கு உயிர் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் அவரை எடுத்துச் சென்று பராமரித்தனர் என்று லண்டனிலுள்ள ரோயல் கல்லூரி மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.“ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (தினகரன் 28.04.91) ஆனால் அவர் இரு கரங்களும் சிலுவை மரத்தின் கிடைகம்பத்தில் நீட்டப்பட்ட நிலையில் பிணைக்கப்பட்டிருந்தமையால் இதயம் இழுக்கபட்ட கிழிந்து மரித்தார் என்று பார்த்தோம். இயேசு கிறிஸ்து மரித்ததை உறுதிப்படுத்திய பின்பு அவருடைய சரீரத்தை பிலாத்து யூதர்களிடம் கையளித்தான் (மாற்கு 15:43-45) அதன் பின்பு அவருடைய சரீரம் யூத முறையின்படி அடக்கம் பண்ணப்பட்டது. (மத். 2757-60, மாற். 15:42-47, லூக். 23:50-55, யோவான் 19:38-42) இயேசு கிறிஸ்து உண்மையிலேயே மரித்திருந்தமையினாலேயே அவருடைய சரீரம் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது.
இயேசு கிறிஸ்துவின் சரீரம் யூத முறையின்படி அடக்கம் பணணப்பட்டமையினால் (யோவான். 19:40) அவர் சிலுவையில் மயக்க நிலையில் இருந்திருந்தால், மரண சடங்குகள் அவரை மயக்கத்திருந்து எழுப்பியிருக்கும். ஏனென்றால், “அவர்கள் மரித்த சரீரத்தை அடக்கம் செய்வதற்கு முன்பு அதை கல்லினால் செய்யப்பட்ட ஒரு மேசையின்மேல் வைத்து,, இளஞ்சூடான நீரினால் கழுவுவார்கள். (Belief Rites and Customs of the Jews Connected with Death Burial and mourning by A.P. Bender) இயேசு கிறிஸ்து உண்மையில் மரிக்காமல் இருந்திருந்தால் இவ்வாறு அவரைக் கழுவிய போது அவர் மயக்கம் தெளிந்து எழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடககவில்லை. “சரீரம் கழுவப்பட்டதன் பின் வாசனைத் திரவியங்கள் போடப்பட்டு சீலைகளினால் சுற்றப்பட்டு கல்லறைக்குள் வைக்கப்படும் (Ibid) காலிலிருந்து கழுத்து வரையும் முதலில் சீலைகள் சுற்றப்படும். பின்பு தலை தனியாக சுற்றப்படும். “சீலைகளை இலகுவாக சரீரத்திலிருந்து பிரித்தெழுக்க முடியாத வண்ணம் ஒட்டுந் தன்மையுடைய வாசனைத் திரவியங்கள் பூசப்பட்டு சீலைகள் சரீரத்தை சுற்றி சுற்றப்படும். (Homilies of St. John by. J. Chrysostom) இயேசு கிறிஸ்துவின் சரீரமும் இவ்வாறு வாசனைத் திரவியங்களுடன் சீலைகளினால் சுற்றப்பட்டு கல்லறையொன்றுக்குள் வைக்கப்பட்டது. (யோவான் 19:41-43, லூக். 23:53)
இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல் புரட்டி வைக்கப்பட்டதோடு (மத். 27:60) சரீரத்தை எவரும் களவெடுத்துக் கொண்டு போய்விடக்கூடாது என்பதற்காக காவலும் போடப்பட்டு அதற்கு அரசின் முத்திரையும் இடப்பட்டது (மத். 27:65-66) எனவே சரீரம் அக்கல்லறைக்குள் இருந்தது என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.
“இயேசுவின் கல்லறையில் போடப்பட்ட ரோம மு்த்திரையானது அவரது சரீரம் அங்கு இருக்கிறது என்பதை ரோம அரசு உறுதிப்படுத்து்ம் செயலாக உள்ளது. (The Resurrection Factor by Josh McDowell) இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தமையினாலேயே அவருடைய சரீரம் கல்லறைக்கள் வைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து கல்லறையில் அவருடைய சரீரம் அடக்கம் பண்ணப்பட்டமையினால் அவர் மயக்கத்திலிருந்து உணர்வடைந்தார் என கூறுவதற்கில்லை வேதாகமம் தெளிவாக குறிப்பிடுவது போல அவர் மரணத்திலிருந்தே உயிர்த்தெழுந்தார்)

Monday 10 June 2013

REHOBOTH CHURCH DETAILS

REHOBOTH CHURCH DETAILS

       ADDRESS:

                    NEW BUS STAND BACK SIDE,
                            PUTHUMANAI 3rd STREET,
                            SANKARANKOVIL,
                                        THIRUNELVELI(DT),
                                        TAMILNADU.

 CONTACT:

         MAIL ID: rph.snkl@gmail.com