Friday 8 November 2013

வேதத்தை உபதேசிக்கின்ற ஒரு நல்ல சபையை கண்டுபிடி சபையை ஒரு கட்டிடமாக நினைக்க வேண்டாம். விசுவாசி தான் சபை இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசிகள் ஒருவருக்கொருவர் ஐக்கியம் கொள்ளுதல் (அ) அவசியமானதும் திருச்சபை அடிப்படை குறிக்கோளின் ஒன்றுமாக இருக்கிறது உங்கள் விசுவாசத்தை கிறிஸ்துவின் மேல் வைத்து உங்கள் பகுதியில் வேதத்தை விசுவாசித்து அதன் சத்தியத்தை போதிக்கின்ற சபையை கண்டுப்பிடித்து அதின் போதகரோடு பேசுங்கள். நீங்கள் கிறிஸ்துவில் வைத்து இருக்கிற புதிய விசுவாசத்தை போதகரும் அறிந்து கொள்ளட்டும். திருச்சபையின் இரண்டாம் குறிக்கோள் வேதத்தை உபதேசிப்பதே. தேவனின் கட்டளைகளை உங்கள் வாழ்க்கையில் எப்படி அப்பியாசப்படுத்துகிறது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள இது வழிவகுக்கிறது வேதத்தை புரிந்துகொண்டு வாழ்ந்தால் நீங்கள் வெற்றியுள்ள. வல்லமையுள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழலாம். II திமோ. 3:16-17 சொல்கிறது "வேதவாக்கியங்கலெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது அவைகள். உபதேசத்திற்க்கும். சீர்திருத்தத்திற்கும். நீதியை படிப்பித்தலுக்கு பிரயோஜன முள்ளவைகளாயிருக்கிறது." திருச்சபையின் மூன்றாம் குறிக்கோள் ஆராதிப்பது. ஆராதிப்பது என்பது தேவன் நமக்கு செய்த எல்லா காரியங்களுக்கும் நன்றி செலுத்துவதாகும் தேவன் நம்மை இரட்சித்தார். நம்மை நேசிக்கிறார். நம் தேவைகளை சந்திக்கிறார். நமக்கு வழிகாட்டி நடத்துகிறார் நாம் அவருக்கு நன்றி செலுத்தாமல் இருப்பது எப்படி? தேவன் பரிசுத்தர். நீதியுள்ளவர், அன்பானவர், இரக்கம் உள்ளவர். கிருபை நிறைந்தவர், வெளிப்படுத்தல் 4:11 "கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுகொள்கிறதற்குப் பாத்திராராயிருக்கிறீர் என்று அறிவிக்கிறது.


No comments: